மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

0
74

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்விக் கொள்கையில், கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.இந்த புதிய கல்விக் கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும்,எதிர்த்து வரும் நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் அதில் உள்ள மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் ,சமூகநீதிக்கும் , இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிராக இருக்கிறது.இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இதனை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அமைதி காப்பதாக கூறினார்.மேலும் புதிய கல்விக் கொள்கையில், பேரறிஞர் அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி தமிழக அரசு உடனே மௌனம் கலைத்தாக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Parthipan K