உரிய நேரத்தில் எந்த நிதியும் வழங்கப்படுவதில்லை! மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

0
77

தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் இருக்கின்ற தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் அன்பரசு தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது நான் எப்போதுமே அதிகமாக பேச மாட்டேன் செயலில் நம்முடைய திறமையை காட்ட வேண்டும் என ஒரு அடுக்கு மொழி இருக்கிறது. பேச்சை குறைத்து நம்முடைய திறமையை காட்டிவிட வேண்டும் டூ ஆர் டை என்று என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் இருக்கிறது. செய் அல்லது செத்து மடி என கூறியிருக்கிறார்.

இருந்தாலும் அந்த வார்த்தையை கூட சற்றே திருத்தம் செய்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தால் என்னை பொறுத்தவரையில் இந்த டூவுக்கும்,டைக்கும், இடையே இருக்கின்ற ஆர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு டூ அண்ட் டை என்று தெரிவிக்க வேண்டும், அதாவது செய்து முடித்து விட்டுத்தான் சாகவேண்டும் என்ற உணர்வுடன் நான் என்னுடைய கடமையை செய்து கொண்டிருக்கிறேன் என கூறினார்.

அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதை சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் அதன்காரணமாக, தான் திமுக ஆட்சி அமைந்த சமயத்தில் எல்லாம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு முன்னேற்றத்திற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் காட்டி கொண்டு இருக்கின்றோம். என்பதை நானும் மறந்துவிடவில்லை நீங்களும் மறந்து இருக்க மாட்டீர்கள் என கூறியிருக்கிறார்.

அரசு அலுவலர்கள் நடத்தை தொடர்பான ரகசிய குறிப்பேட்டை நீக்கியவர் கருணாநிதி ,அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கியவர் கருணாநிதி, இந்த கருணையை நாட்டிலேயே வழங்கிய முதல் அரசு திமுக அரசுதான். அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் உயிரை இழக்க நேர்ந்தால் அவருடைய வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் திமுக அரசுதான். இவ்வாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகைகளை தெரிவித்துக் கொண்டே போகலாம் என கூறியிருக்கிறார்.

சென்ற மே மாதம் ஆட்சிக்கு வந்தோம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் தான் சென்றிருக்கிறது. அதற்குள் ஏராளமான திட்டங்கள் அரசு ஊழியர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக இருக்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை என்ற அரசு நிச்சயமாக படிப்படியாக அதே சமயம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று நான் தமிழக சட்டசபையிலேயே அறிவித்து உள்ளேன். அந்த உரிமையுடன் மற்றும் தகுதியுடனும் தான் நான் இந்த மாநாட்டிற்கு வருகை தந்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.

சென்ற 10 வருடகாலமாக தமிழகத்தின் நிதி நிர்வாகத்தை சீரழித்தும் சூரையாடியதுமான ஒரு ஆட்சி நடைபெற்று வந்தது, இந்த தவறுகளிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிக விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக உள்ளது என கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் உங்களுடைய அனைத்து விதமான கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து கேட்காமலேயே நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றிக் கொடுக்கும். ஆகவே நான் இருக்கிறேன் நீங்கள் இது தொடர்பாக சிறிதளவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என கூறியிருக்கிறார்.

அரசு கஜானாவிற்கு வர வேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி அதனை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு பறித்து விட்டது, அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள், நிதி நிலைமையை பொருத்தவரையில் மத்திய அரசிடம் கொத்தடிமை போல கையேந்தும் நிலையில் தான் மாநிலங்கள் உள்ளன. ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரணநிதி வரையில் நமக்கு தரவேண்டிய நிதியை முழுமையாக கொடுக்கப்படுவதில்லை. கொடுக்கப்படும் நீதியும் உரிய சமயத்தில் வழங்கப்படுவது இல்லை என அவர் பேசியிருக்கிறார்.