முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்! 

0
75

முன்னாள் முதல்வருக்கே டப் கொடுக்கும் இன்னாள் முதல்வர்!

கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு தற்போது உள்ளது.தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இன்றி தினம் பலாயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறோம்.தற்போது அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டில் காணப்படுகிறது என கூறியதால் தற்போது முதல்வருக்கு பெருமளவு பொறுப்புகள் குவிந்துள்ளது.

அந்தவகையில் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான சேலம்,ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு நடத்த உள்ளார்.அந்தவகையில் இன்று காலை தனிவிமானம் மூலம் சேலம் வந்தார்.அவர் முதலில் சேலத்தில் உருக்காலையில் கட்டப்பட்டு வரும் 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.அதனையடுத்து அவற்றை பார்வையிட்டார்.

அதற்கடுத்ததாக அவர் ஈரோடு,திருப்பூர்,கோயம்பத்தூர் செல்ல உள்ளார்.மக்களை பேணிக்காக்கும் விதத்தில் இன்னாள் முதல்வர் பெரும் நெருக்கடியில் உள்ளார்.முன்னால் முதல்வருக்கு டப் கொடுக்கும் விதத்தில் பல நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் சொல்லிக்கொள்ளும் விதத்தில் திமுக முன்னிலை வரவில்லை என்றாலும் பாரபட்சமில்லாமல் சேலத்திற்கு நலப்பணிகளை செய்வாரா என காத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.