மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

0
46

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன ஆனாலும் பாஜக மற்றும் மதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை புகட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை செய்து இருக்கின்றார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு விவசாயிகள் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது அதிலும் விவசாயிகள் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறாதது இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது மத்திய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாக காரணமாகி இருக்கின்றது.

அனைத்து வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய அரசும் மாநில அரசும் கூட்டணி வைத்து செயல்பட்டு வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் இப்போது வெற்றியை பெற்று இருந்தாலும் அந்த இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை வாக்குச்சீட்டு மூலமாக கற்பிக்கும் விவசாயிகளுடைய நலனை பொருட்படுத்தாமல் கமிஷன் என்ற ஒரே நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக அராஜக காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனிமேலாவது விவசாயிகளின் நலன் காக்க முன் வருவாரா?

விவசாயிகளுடைய உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை இருக்க வேண்டுமே தவிர மீண்டும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது எனவே சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் இது மத்திய அரசின் திட்டம் என தெரிவித்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைக்கக்கூடாது கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தான் விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.