ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

0
56

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தியில் பதில் தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்தது சம்பந்தமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சனும், வெங்கடேசனும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

கடிதத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஹிந்தி பதில் எழுதி இருக்கிறார். இவருக்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே மறுபடியும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதில் தரும் மத்திய அமைச்சகங்கள் கண்டனத்திற்கு பின்னரே ஆங்கிலத்தில் பதில் அளித்து இருக்கிறார்கள். அலுவல் மொழியின் சட்டத்தையே மீறுவதா? என்றும், பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழி வெறி உணர்வை கண்டிக்கிறேன் என்றும், குறிப்பிட்டிருக்கின்றார்.