திடீரென்று அரசு பேருந்தில் ஏறிய முதலமைச்சர் பதறிப்போன நடத்துனர்! மகிழ்ச்சியடைந்த பயணிகள்!

0
61

ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தன்னுடைய காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்தில் திடீரென்று ஏறி பயணம் செய்தார். முதலமைச்சர் அரசு பேருந்தில் திடீரென்று ஏறியதால் பேருந்தில் இருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர். நடத்துனரிடம் பேருந்து பயணம் தொடர்பான விவரத்தை கேட்டறிந்தார் முதல்வர்.

அதன் பிறகு ஒரு பெண் பயணியிடம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் தொடர்பாக கருத்து கேட்டார்.

அப்போது பேசிய அந்த பெண்மணி இந்தத் திட்டத்தால் நாங்கள் நன்றாக பயனடைந்துள்ளோம். இந்த திட்டத்திற்கு உங்களுக்கு மிகவும் நன்றி என தெரிவித்தார். அதே சமயம் வெள்ளை பலகையில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கிறது.

அதனை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் அடுத்த பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கி காருக்குத் திரும்பினார்.

முன்னதாக தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒரு வருட காலம் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஒரு வருட காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்திலுள்ள தன்னுடைய தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்று அங்கே அவருடைய தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

அதோடு அண்டை வீட்டாரிடமும் வாழ்த்துப் பெற்றார் என சொல்லப்படுகிறது.

அடுத்தபடியாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அங்கே மரியாதை செலுத்தினார்.