நாடகமாடும் எடப்பாடி! ஸ்டாலின் விலாசல்!

0
57

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருப்பது எல்லோரையும் திசை திருப்புவதற்காக போடப்படும் நாடகம் என்று ஆளுநரை சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். அதேபோல எதற்காகவோ ஆளுநரை சந்தித்த முதல் அமைச்சர் ராஜிவ் கொலை தொடர்பாக உரையாற்றினேன் என்று பொய்யுரைத்து இருக்கிறார் என்று தெரிவித்தார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சென்ற 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கின்ற பேரறிவாளன் ,சாந்தன், போன்ற ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது எனவும், இது தொடர்பாக அவர் மட்டுமே முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து 7 பேர் விடுதலை தொடர்பான விஷயத்தில் ஒரு வார காலத்தில் தன்னுடைய முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது இந்நிலையில், மத்திய அரசு சார்பாக உள்த்துறை துணைச் செயலாளர் தாக்கல் செய்திருக்கின்ற பிரமாண பத்திரத்தில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு தான் முழுமையான அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுநர் தரப்பு தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னர் அந்த 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்து வந்த மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையின் போது தமிழக ஆளுநர் மட்டுமே முடிவெடுப்பார் என்று தெரிவித்தது. இப்போது அதை மாற்றிக் கொண்டு தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார் ஆளுநர்.

இந்த நிலையில், சென்ற 29ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவை தீர்மானத்தை ஆதரித்து ஆளுநரை வலியுறுத்தி ஆளுநர் கிடப்பில் போட்டது சந்தித்து அவருடைய உரையையும் புறக்கணித்தது எங்கள் கட்சி வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் எதற்காகவோ சந்தித்துப் பேசிவிட்டு 7 பேர் விடுதலை தொடர்பாக பேசினேன் என்று தெரிவிக்கிறார் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.