சசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி! ஸ்டாலின் விளாசல்!

0
152

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பம்பட்டி ஊராட்சியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்..

அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, இங்கே வந்திருக்கும் மக்களாகிய நீங்கள் ஏதோ உங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதைப்போல வந்திருக்கிறீர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறீர்கள். அதனால் எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிய தயாராகி விட்டதாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதோடு இதுவரையில், முதல்வராக இருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கும் சரி இந்த எடப்பாடி தொகுதிக்கும் சரி என்ன நன்மைகள் செய்து விட்டார்? என்று கேள்வி எழுப்பினார். இந்த தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத எடப்பாடியார் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எப்படி செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சசிகலாவின் கருணையால் பதவியை வாங்கிவிட்டு இந்த எடப்பாடி தொகுதி முதலமைச்சர் தொகுதி என்று பெரிதாக பேசிக் கொள்கிறார். நீங்கள் என்னவோ ஓட்டு போட்டது அவருக்கு சட்டசபை உறுப்பினராக வர வேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்த ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் சசிகலாவின் கருணையால் பதவியை அடைந்து விட்டு இப்படி பெருமை பேசிக் கொள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்தார்.

அவர் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தில் வேலை வாய்ப்புகள், மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவி போன்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இப்படி இருக்கும் நிலையில், பெருமை மட்டும் பேசிக் கொள்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது அதை விட இந்த மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருக்கிறார் .அவர் வெளியே வந்தால் எடப்பாடி பழனிச்சாமி எங்கே இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அதோடு சசிகலா விடுதலையான பிறகு ஒரு சில முக்கிய அமைச்சர்கள் அணி மாற இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி பீதியில் இருந்து வருகிறார். ஆகவே மக்களாகிய நீங்கள் அதிமுகவை தூக்கி எறிய உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்து கொண்டீர்கள் என்று எனக்கு தெரியும் அதனால் தான் இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் வந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.