தொல்காப்பியப் பூங்காவில் மறுசீரமைப்பு பணிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

0
108

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 2008ஆம் வருடம் சென்னை அடையாறில் 58 ஏக்கர் பரப்பிலான தொல்காப்பிய பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்டது. இதனை தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் பார்வையிட்டு அங்கு நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

அதோடு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சார் துறைகளுடன் ஒன்றாக இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் சீரமைப்பு பணிகள் மற்றும் சுமார் 2773 149 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு நதிகளின் வடிகால்கள் சீரமைப்பு எண்ணூர் கழிமுகப் பகுதியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

இன்று சீரமைப்பு பணிகளில் ஒரு பகுதிகளாக ஆற்றங்கரை ஓரங்களில் தாவரங்கள் மற்றும் நடவு செய்யும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்டோருக்கு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் வல்லுனர்களின் கருத்து பெறப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அந்த குடும்பங்களுக்கு தமிழக நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்பட்டு இருக்கின்ற குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வு திட்டப்பணிகள் மிக விரைவாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

தற்சமயம் நடந்து வரும் தூர்வாரும் பணிகள், திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலி அமைப்பது, கழிவுநீரை இடைமறித்தல் , மாற்று வழிகளை அமைத்தல், உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதோடு நீர்வள ஆதார துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சார்பாக பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கால்வாய், கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளின் வடிகால்கள் உள்ளிட்டவற்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும், அவர் அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். தொல்காப்பியர் பூங்காவிற்கு அதிக அளவில் மாணவர்கள் வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.