விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

0
139

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு! அதிர்ச்சியில் பொன்முடி

திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் வன்னியர் சமுதாயத்தின் பிறந்தவரான ஏ.கோவிந்தசாமி மற்றும் வன்னிய இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 20 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சட்ட வழிமுறையை பின்பற்றி உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைக்கு இருக்கும் பின்னால் இருப்பதை விவரமாக பார்க்கலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிமுகவிற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி அவர்கள் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது, அவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மையாக வசிக்கும் கூடிய மாவட்டம் ஆகும். ஒரு சில தொகுதிகளில் தலித் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரையில் வன்னியர்களின் அதிகம் வசிக்க கூடிய தொகுதியாகும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டு கோரி போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் பெரும்பாலானோர் விழுப்புரம் மாவட்டம் தான்.

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் கிராமத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் தியாகிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தவறாமல் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் ஏராளமான வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள். வன்னியர் சங்கம் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைத்து அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருவார்கள். இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு என தனி செல்வாக்கு பெற்ற தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது, இத்தொகுதியில் வன்னியர்களை தவிர வேறு யாரும் போட்டியிட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தொகுதி மக்களிடம் கேட்டாலே தெரிந்துவிடும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரவிக்குமார் அவர்கள் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார், அவர் முன்னிலை பெறுவதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தொகுதி முழுவதும் விவசாய பெருமக்களை சார்ந்த தொகுதி என்பதால் விவசாய கடன் தள்ளுபடி,கல்விக்கடன் தள்ளுபடி போன்ற கவர்ச்சி மிக்க தேர்தல் வாக்குறுதிகள் காரணமாகவே திமுகவிற்கு வாக்குகளை அளித்தனர், ஆனால் தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாக மாறியதால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

மாவட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அச்சமுதாயத்தின் வாக்குகள் அவருக்கு நம்பிக்கை அளிக்கின்றன. மேலும் திமுக மாவட்டச் செயலாளர் கா.பொன்முடி அவர்கள் எப்பொழுதும் வன்னியர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுப்பவர்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுகவை மூன்றாகப் பிரித்த திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒருவரைக்கூட வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்படவில்லை. இது அக்கட்சியில் உள்ள வன்னியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முழு காரணம் பொன்முடியின் செல்வாக்கு தான். மு.க. ஸ்டாலின் வன்னியர் எதிர்ப்பை அவரும் பின்பற்றுகிறார் என்ற தோற்றம் பரவலாகவே வன்னியர்களிடையே எழும்பும். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் இருந்தபோதும் மாவட்ட அவைத்தலைவராக மஸ்தானும் மாவட்டச் செயலாளராக பொன்முடியும் இருந்தனர்.

முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு பதவியை அளிக்காமல் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு மட்டும் பதவி சுகத்தை கொடுத்து அழகு பார்த்து வருகிறார், இதனாலேயே விழுப்புரம் தொகுதி பொன்முடியின் கோட்டை என்ற பிம்பத்தை நொறுக்கினார்கள வன்னியர்கள். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சிவி சண்முகம் அவர்களை ஜாதி ரீதியான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்தனர் வன்னியர்கள் தான் என்பது அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு தெளிவாக தெரியும், இதன் காரணமாக மீண்டும் இரண்டாவது முறையாக சீ.வி.சண்முகத்திற்கு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்.

வன்னியர்களை நம்மை எதிர்க்கின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பொன்முடி அச் சமுதாயம் அதிகம் வசிக்கக்கூடிய திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்றார். அவர் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும், அவர் தொகுதியில் போட்டியிட்டாலும் விழுப்புரம் தொகுதியில் தன்னைத்தவிர வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதற்காக பெரும்பான்மையாக வசிய கூடிய வன்னியர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சம்பந்தமே இல்லாம இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினார். இதனால் வன்னியர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர்.

விக்கிரவாண்டியில் தொகுதியில் மு.க. ஸ்டாலின் அறிக்கை 100% தோல்வி பயம் காரணமாக வெளியிட்டார் என்பது வன்னியர்களுக்கு தெரியும்.

காரணம் பொன்முடிக்கு ஆதரவாக இருப்பது, மாவட்டத்தை பிரிக்கப்பட்ட பிறகு வன்னியர் ஒருவருக்கூட மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.

விக்கிரவாண்டி தொகுதியில் முழுக்க முழுக்க பாமக ஆதிக்கம் மிக்க தொகுதி என்பதால் சாதிரீதியான வாக்குகளை இதைச் சொல்லியே நடுநிலையான வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். இது ஸ்டாலின் காதுக்கு சென்றவுடனேயே என்ன செய்வது என்று தெரியாமல் இந்த அறிக்கையை திடிரென வெளியீட்டு திசைதிருப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் செல்வாக்கு இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது, இதனால் ஜெகத்ரட்சகனின் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை, கடலூர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களும் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளார் இவரை வன்னியர்கள் கண்டுகொள்ளவில்லை, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்ட பொது மறுத்துவிட்டார் ஸ்டாலின், இது வன்னியர் எதிர்ப்பு இல்லையா, பொன்முடி மகனுக்கு சீட், துரைமுருகன் மகனுக்கு சீட், ஆற்காடு வீராசாமி மகனுக்கு சீட், தங்கம் தென்னரசு தங்கைக்கு சீட், ஆனால் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மகனுக்கு சீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டார்.

மேலும் திமுக ‌முன்னோடி சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட இதுவரையும் வாய் திறக்கவில்லை. அவருடைய மகன் வீரபாண்டி ராஜா கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்,

பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பை தோலுரித்து அதிமுக மற்றும் பாமகவினர் காட்டுவதால் கலக்கத்தில் உள்ளனர் திமுகவினர், தொகுதியில் திருமாவளவன் பிரச்சாரம் செய்தாலே வாக்குகள் சிதறும் என்பதை அங்குள்ள திமுகவினரை அறிவார்கள் அப்படி, இருந்தும் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவனை அழைத்து பேச வைத்துள்ளார் மு.ஸ்டாலின். இது திமுகவிற்கு பின்னடைவு விளைவிக்கும் என்பது கள உண்மை,

வன்னியர்களை எதாவது ஒரு வகையில் சமாதானபடுத்த வேண்டும் என்பது தான் இந்த அறிக்கை என்பது ஊரறிந்த உண்மை.

author avatar
Parthipan K