MK Stalin Criticise PM Modi as Sadist-News4 Tamil Online Tamil News Website
MK Stalin Criticise PM Modi as Sadist-News4 Tamil Online Tamil News Website

தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட் தான் என பலமுறை சொல்வேன் என்று பாஜகவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி

பிரதமராக இருக்கக்கூடிய மோடியை தான் சொல்கிறேன். அவர் சேடிஸ்ட் தான் என ஒரு முறை அல்ல பலமுறை சொல்வேன் அவர் சேடிஸ்ட் தான் என திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் மோடி குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த முன்னாள் தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அந்த கட்சியுடனான கூட்டணியை உறுதி செய்தார்.

அதே நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை “மோடி ஒரு சாடிஸ்ட்” என்று மோசமாக விமர்சித்திருந்தார்.திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.அதில் மோடி சாடிஸ்ட் கிடையாது. இவ்வாறு பிரதமர் மோடியை சாடிஸ்ட் என்று கூறிய ஸ்டாலின் தான் இனிமேல் சாடஸ்ட் என்று அழைக்கபடுவார் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த கட்சியின் எம்எல்ஏ மஸ்தான் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

கருணாநிதி சிலை திறப்பு விழாவிலே நான் பேசுகின்ற நேரத்தில் இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடியை சேடிஸ்ட் என்று நான் சொல்லியிருந்தேன், அதை சொல்லலாமா சொல்லக் கூடாதா என்பது பற்றி இன்றைக்கு ஒரு விவாத பொருளாகி வருகிறது,  நேற்றைய தினம் திருச்சியில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் கூட அதை நான் குறிப்பிட்டு பேசி இருக்கிறேன்.

 நான் அவ்வாறு சொன்னதில் என்ன தவறு இருக்கிறது, மோடி அவர்களை சேடிஸ்ட் என்று தனிப்பட்ட முறையில் நான் சொல்லவில்லை. அவர் பிரதமராக இருக்கிறார். பிரதமர் என்றால் ஓட்டு போட்டவர்களுக்கும், ஓட்டு போடாதவர்களுக்கும் அவர் தான் பிரதமர். ஓகி புயல், வர்தா புயல் இப்பொழுது வந்த கஜா புயல் என தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பாதிப்புக்கள் ஏற்பட்டு இருக்கின்றது,

அதுவும் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் 65 பேர்கள் மாண்டு போய் இருக்கிறார்கள், அதற்கு ஏதாவது ஒரு ஆறுதல் செய்தி பிரதமரிடத்தில் இருந்து வந்ததா? ஆனால், அதே பிரதமர் குஜராத் மாநிலத்திலோ, மஹாராஷ்டிரா மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ ஏதேனும் துயரச்செய்தி வந்தால் உடனடியாக அவர் வருத்தம் தெரிவிக்கிறார், அனுதாபம் தெரிவிக்கிறார், இரங்கல் தெரிவிக்கிறார்,

ஆனால், தமிழ்நாட்டில் 65 பேர் இறந்திருக்கிறார்கள். அங்கே விவசாயிகளின் சிரிப்பை பார்க்க, வாழ்க்கை வளத்தை உருவாக்கிக் கொள்ள இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்.அந்தளவிற்கு விவசாயம் அங்கு பெருமளவில் அழிந்து போய் விட்டது. டெல்டா பகுதிகளில் ஏறக்குறைய 8 மாவட்டங்களில் இந்தக் கொடுமை நடந்து இருக்கிறது, அதை நேரடியாக பிரதமர் வந்து பார்க்க வேண்டாமா? இதை சரி செய்ய தமிழக அரசு பதினைந்து ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.

ஆனால், வழங்கி இருக்கக்கூடிய தொகையோ வெறும் முன்னூறு கோடி ரூபாய், அதுவும் முன்னூறு கோடி ரூபாய் நிவாரணத்திற்காக வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் கிடையாது.

தமிழ்நாட்டு மக்களைகேவலப்படுத்துகிற,தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத நிலையில் ஒரு பிரதமர்இருக்கிறார் என்று சொன்னால், நான் தனிப்பட்ட மோடியை அல்ல,பாஜக மோடியை அல்ல இந்திய பிரதமராக இருக்கக்கூடிய மோடியை தான்  சொல்கிறேன். அவர் ஒரு “சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான், சேடிஸ்ட் தான்” என நான் ஒரு முறைஅல்ல பலமுறை சொல்வேன்’’ என்று பேசியுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள்,தேசிய செய்திகள்,உலக செய்திகள்,விளையாட்டு செய்திகள்,வர்த்தக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள் மற்றும் சினிமா செய்திகளை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.