அரசு விழாவாக கொண்டாடப்படும் இருக்கும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

0
58

இன்றைய தினம் தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் இந்த கோவில் விளங்கி வருகிறது.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக புராதான பாரம்பரிய சின்னமாக இந்த கோவிலை அறிவித்திருக்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பை கண்டுகளிக்க உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரபலமான இந்த கோவில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அந்தப் பகுதி வாழ் மக்களால் பெரிதும் விமர்சையாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவினை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு அந்த பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல அமைப்பினர் சார்பாகவும், பல வருட காலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கோரிக்கையை தற்சமயம் பரிசீலனை செய்து இருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பாக அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.தற்சமயம் நோய்த்தொற்று பரவல் இருந்து வருவதன் காரணமாக, எதிர்வரும் வருடம் முதல் இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.