அடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!

மருத்துவர் இராமதாஸ் அவர்கள் திமுகவின் முரசொலி நிறுவனமே பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது, அதை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

மு.க ஸ்டாலின் அதை எதிர்த்து பின்வருமாறு அறிக்கை விட்டிருக்கிறார்.

மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட
பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!

அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

இக்கடுமையான வார்த்தை போரில் வெல்லப்போவது யார் என்பதை தேர்தல் முடிவுகள் தான் சொல்லும்.

Copy
WhatsApp chat