அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
73

உதயநிதி செய்துவரும் டார்ச்சர் காரணமாக நொந்து போயிருக்கிறார் கனிமொழி என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக இப்போது மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதை மிகவும் கூலாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கனிமொழி என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி கட்சிக்கு ஒருவர் மட்டுமே போதும் என்ற ரீதியில் இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இருந்தாலும் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரையில், திமுகவில் இணைவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தார் அழகிரி. ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை. கருணாநிதி மறைவிற்கு பின்னர் மறுபடியும் திமுகவில் இணைய நினைத்தார் அழகிரி ஆனாலும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்ததே தவிர அழகிரியின் ஆசை நிறைவேறவே இல்லை. தன்னுடைய மகனுக்கு ஒரு பதவி கொடுக்க வேண்டுமென்று நினைத்தார் அதற்கு கூட ஸ்டாலின் இசைவு அளிக்கவில்லை.

அதன் காரணமாக, இப்போது வேறு வழியே இன்றி புதிய கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அழகிரி. இது தொடர்பாக இன்று அழகிரி தெரிவிக்கும்போது வருங்கால நடவடிக்கை தொடர்பாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறேன். இந்தக் கூட்டமானது ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை பாண்டி கோவில் அருகில் இருக்கின்ற துவாரகா திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. என்று தெரிவித்திருக்கின்றார் இந்த நிலையிலே அழகிரி கட்சி தொடங்குவதற்கு திமுகவை சேர்ந்த கனிமொழி மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது.

ஆகவேதான் ,அழகிரி கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக கனிமொழியிடம் கேள்வி எழுப்பியதற்கு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மு.க. அழகிரி உட்பட யார் கட்சியை தொடங்கினாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அது பாதிக்காது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க இயலாது ஏனென்றால், அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்ற விஷயத்தில் மக்கள் உறுதியுடன் இருக்கின்றார்கள் என்று தெரிவித்திருக்கின்றார். ஆதரவு உண்டு, அல்லது இல்லை, என்று தெரிவித்து இருக்காமல் சுற்று விவாதத்தில் பேசியது ஸ்டாலின் யோசிக்க வைத்து இருக்கின்றதாம்.