பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

0
83

பாகிஸ்தான் அணி செஞ்ச தவறு இதுதான்… அடித்து சொல்லும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்!

பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி வரை போராடியும் தோல்வியை தழுவியது.

அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு பிறகு இரண்டு முறை கோப்பையை வெல்லும் அணி இங்கிலாந்துதான்.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த அணியின் முனனாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் “பாகிஸ்தான் அணி தோற்றாலும் அவர்கள் போராடிய விதம் பிடித்திருந்தது. அவர்கள் செய்த ஒரே தவறு இறுதி போட்டியின் அழுத்தத்தை சரியாகக் கையாளாததுதான். அது அவ்வளவு எளிதான விஷயமும் இல்லை. இதனால் அணியின் திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.

பேட்டிங்கில் பாபர் அசாம் அவுட் ஆனதும் ஷதாப் கானை இறக்கி இருக்க வேண்டும். அவர் சில நல்ல ஷாட்களை ஆடி இருந்தால், இங்கிலாந்து அணி மீது அழுத்தம் அதிகமாகி இருக்கும்.” எனக் கூறியுள்ளார். ஆனாலும் மிகக் குறைவான இலக்கை பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை கொண்டு சென்றது அவர்களின் போராட்டக் குணத்தைக் காட்டியது.