உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

0
56
Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!
Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள, திருவள்ளூர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர், சிவசங்கரனின் மகன் விஜய் 22 வயதான இவரிடம் உறவினரான கரூரைச் சேர்ந்த சௌமியா பதின் மூன்றரை பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இவருக்கு வயது 24. சௌமியாவிடம் நகைகளை திருப்பி கேட்ட போது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய விஜய் தனது தம்பிக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதற்காக மேலும் 75000 வரை வாங்கினாராம். மேலும் அரசு பஸ் டெப்போவில் வேலை வாங்கி தருவதாக கூறி தலா 2 லட்சத்து 75 ஆயிரம் வரை வாங்கி உள்ளார். இதற்கு ராமநாதபுரம் அருகே உள்ள சிறுவயல் சேர்ந்தவர் சேர்ந்த சதீஷ் என்ற 25 வயதுடைய நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

சதீஷ் தான் அந்த சௌமியாவிற்கு பணம் வாங்கி கொடுப்பதை எல்லாம் செய்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கண்ட அவர்களிடம் 6 லட்சத்து 25 ஆயிரம் வாங்கியவுடன் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியும் உள்ளனர். இதனால் விஜய் பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் மிகவும் நிதானமாக பணத்தினை அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டதாகவும் வேலை வாங்கித் தந்து விடுவார்கள் என்றும் கூறி, காலத்தை கடத்தி உள்ளார். எனவே விஜய் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளார். அவரது உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, மற்றும்  சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையின் போது இதே போல் பல்வேறு மாவட்டங்களில் மேலும் பலரிடம் இது போன்றே சௌமியா மோசடி செய்த அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்தது. இதுவரை மொத்தம் ஆறு பேரிடம் 63 பவுன் நகை மற்றும் 9 லட்சத்து 63 ஆயிரம் சுருட்டிய தாகவும் தெரியவந்துள்ளது. எனவே சவுமியா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் சேலம் சின்ன திருப்பதி பகுதியில், இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கோவை ராமநாதபுரம் திருப்பூர் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனது திட்டத்தை சௌமியா அரங்கேற்றியுள்ளார்.

அங்கு தன் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக யாராவது வாலிபர் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தி, அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை அவர் நான்கு பேர் வரை திருமணம் செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி பயிற்சியில் உள்ளவர் என்பதும் போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்தது. 4 பேருக்கும் அவர் டிமிக்கி கொடுத்துவிட்டு இருக்கிறார்.

கைதான சதீஷ் சௌமியா ஆகிய 2 பேரையும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி உள்ளனர். நீதிபதி உத்தரவின் பேரில் சௌமியா மதுரை சிறையிலும், சதீஷ் விருதுநகர் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.