மசோதாவை நிறைவேற்றிவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்: துணை முதல்வர் ஆவேசம்

0
112

விவசாய துறை சார்ந்த மூன்று மசோதாக்களை நிறைவேற்றினால், ஹர்சிம்ரத் கவுர் பாதல், அவரது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவரும் எம்.பியுமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நடைபெற்ற அத்யாவசிய பொருட்கள் தொடர்பான மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விலை நிர்ணயம் போன்ற மசோதாக்கள் உள்ளிட்டவை வாக்கெடுப்புக்கு வந்துள்ளன.

 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்த மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இதைனை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மசோதாவுக்கு ஆதரவாக பஞ்சாப் எம்.பிக்கள் யாராவது வாக்களித்து விட்டால் அவர்களை எங்கள் பகுதிக்குள் விடமாட்டோம் என்று விவசாயிகளும் எச்சரித்தனர்.

 

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சியும், பாஜகவின் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் கடந்த வாரம் இதனை எதிர்த்து வாக்களித்துள்ளது.

 

இந்நிலையில், இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மத்திய அமைச்சராக உள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவரும் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவருமான சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் சந்தித்து வருகிறார். அவர் தொடர்ந்து மூன்று முறையாக தேர்தலில் வெற்றிபெற்றவராவார்.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஆனார். அதோடு இல்லாமல், கடந்த ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இதே துறையின் அமைச்சர் பதவி திரும்பவும் இவருக்கே ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த மசோதா தாக்கல் நிறைவேற்றம் தொடர்பாக அவர்கள் எடுத்துள்ள முடிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிர்ச்சியினையும், மாநிலத்தின் விவசாய மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

author avatar
Parthipan K