ஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது! அமைச்சர் காட்டம்..!!

0
73

ஜெ இல்லாமல் போனதால் அதிமுகவில் பயம் இல்லாமல் போய்விட்டது! அமைச்சர் காட்டம்..!!

நாகை மாவட்டத்தில் சீர்காழி நகர வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் அதிமுகவின் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஒ.எஸ்.மணியன், ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சியினரிடையே துளியும் பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசியுள்ளார்.

கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அப்பகுதி சார்ந்த பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ பாரதி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் முதன்முதலாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது மிக சிறப்பான விஷயமாகும். இந்திய அளவில் இதுதான் முதல் முறையான சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு என்று கூறினார்.

இதனையடுத்து, காவிரி டெல்டா வேளாண் மண்டல சிறப்பு அறிவிப்பு அரசாணை விவசாய மேம்பாட்டிற்கு சிக்கல் இல்லாத வகையிலும், அதை மத்திய அரசு ஏற்கும் வகையிலும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற முதல்வரின் கூறியதை குறிப்பிட்டு பேசினார்.

மேலும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து சிறப்பான திட்டங்களையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காவிரி டெல்டா பகுதிகளில் அதிமுக தோல்வியை குறிப்பிட்டு பேசினார். குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன்

மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்ற காரணங்களால் நாம் வெல்ல வேண்டிய பல இடங்களை கோட்டை விட்டுவிட்டோம். பொது மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு அனுமதிக்காது என்ற முதல்வரின் கூறியதை நினைவுபடுத்தினார்.

ஜெயலலிதா இருந்தபோது கட்சியினர் பெரிதும் பயந்து செயல்பட்டனர். தற்போது அவர் இறந்த பிறகு கட்சியினருக்கு பயம் இல்லாமல் போய்விட்டது என்று காட்டமாக பேசி முடித்தார். அமைச்சரின் பேச்சை கூட்டதில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

author avatar
Jayachandiran