சிறுபான்மையினர் நலன் காக்க சட்டசபையில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!

0
117

திமுக எப்போதும் இந்துக்களை மட்டம் தட்டியும் சிறுபான்மையினரை பெரிதாக காட்டித்தான் பேசுகிறது. அந்தக் கட்சியின் செயல்பாடுகளும் அப்படிதான் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் திமுகவின் கொள்கையே இந்துக்களை மட்டம் தட்டுவது தான் என்று சொன்னால் அது மிகையாகாது.இதற்கான உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே எத்தனையோ மேடைகளில் செயல்பட்டிருக்கிறார்.ஆனால் தற்சமயம் பாஜக தமிழ்நாட்டில் தலை தூக்கி விட கூடாது என்ற ஒரு காரணத்திற்காக பல விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டசபையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடந்த சட்டசபையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டு உரையாற்றினார்.அந்த அறிவிப்பில் 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் ஏற்படுத்தப்படும் இந்த விடுதிகளுக்கு ஐந்து லட்சத்து 90 ஆயிரம் ரூபாயில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் எடுக்கும் மாணவர்களுக்கு தமிழக திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி வழங்கப்படும் என கூறியதோடு, சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்திருக்கின்ற உறுப்பினர்கள் அல்லது குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆனது ஆண்களுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் ஆகவும், பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் ஆகவும், அதிகரித்து வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற சிறுபான்மையினருக்கு மூன்று கோடியே நாற்பத்தி ஏழு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும் என கூறியுள்ளார் அமைச்சர் மஸ்தான்.ஜெருசேலம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிக்கு கொடுக்கப்பட்டு வரும் மாணியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்கின்ற உறுப்பினர்களுக்கு 1553 மிதிவண்டிகள் 4 கோடியே 76 லட்சத்து 23 ஆயிரம் செலவில் இலவசமாக வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.

அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்கப்படும் தமிழக வக்பு வாரியம் தன்னுடைய பணிகளை மிகத் திறமையாக மேற்கொண்டு வரும் விதத்தில், சென்னையில் இருக்கின்ற தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய இடத்தில் புதிதாக கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மஸ்தான்.

சிறுபான்மையினர் அதிகமாக வசித்து வரும் ஐந்து மாவட்டங்களில் புதிய பணியிடங்கள் உடன் கூடிய மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் ஒரு கோடியே 75 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார். அதோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.