அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

0
73

வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரிய வெங்காயம் விலை உயர்வை கண்டுள்ளது. அங்கிருந்து வரவேண்டிய சரக்குகள் கடந்த சில தினங்களாக தமிழகம் வந்தடையாத நிலையிலுள்ளது. 

அதனால் தற்போது வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும் ஒரு சில இடங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிகமான விலையில் விற்கப்படுவதை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசின் கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகளில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 40 விற்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. அதுமட்டுமன்றி பெரியவெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி  அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

author avatar
Parthipan K