கோவில் நிலங்கள்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
82

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது திமுகவின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது அதனை அதிகார துஷ்பிரயோகம் மூலமாக திமுக கைப்பற்றியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக ஆனவுடன் உடன் தமிழகம் முழுவதும் இது தொடர்பான பேச்சுக்கள் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் அவர்களே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பொய்யான தகவல் அந்த நிலத்திற்கான பாத்திரம் என்னிடம் இருக்கிறது என்பது போன்ற பதிலையும் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இருந்தாலும் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்து கொண்டிருந்தது. சமூக வலைதளங்களிலும் மாணவர்கள் மற்றும் சமூக வலைதள வாசிகள், இளைஞர்கள் என்று எல்லோரும் ஸ்டாலின் அவர்களை குறிப்பிட்டு இது தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினார்கள். அதற்கு திமுகவைச் சார்ந்தவர்களும் தகுந்த பதிலடி கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

நாட்கள் செல்ல, செல்ல, மெல்ல, மெல்ல அந்த பிரச்சனை மறைய தொடங்கியது. இந்த நிலையில், தற்போது கோவில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே இடம் கிடையாது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் நாள்தோறும் ஐயாயிரத்திற்கும் அதிகமானோருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி அதாவது நாளைய தினம் தொடங்கப்பட இருக்கின்றது. இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற மூன்று கோவில்களிலும் நேற்றைய தினம் ஆய்வை செய்து இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து சமயபுரம், திருத்தணி, உள்ளிட்ட கோவில்களில் அமைச்சர் ஆய்வு செய்தார் திருவானைக்காவலில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு எதிர்வரும் 16ம் தேதி திருச்செந்தூர். சமயபுரம், திருத்தணி போன்ற கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இணையதளம் மூலமாக தொடங்கி வைத்திருக்கிறார். கோவில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 5 வருடங்கள் தொடர்ந்து பணிபுரிந்து வரும் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மிக விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் இதுகுறித்து கடந்த ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆனால் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருக்கிறது என கூறியிருக்கிறார் அமைச்சர்.

தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான சுமார் 180 ஏக்கர் நிலங்கள் ஆட்சி அமைப்பில் இருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன. கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறைவன் சொத்து என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பிலிருந்து நிலங்களை மீட்டு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கூறியிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

அதோடு மன்னர் காலத்தில் மன்னர்கள் மற்றும் ஜமீன்தார் அவர்களால் தானமாக கொடுக்கப்பட்டு இருப்பதுதான் கோவில் நிலங்கள். ஆகவே அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க இயலாது. மயிலாடுதுறையில் அப்படி பட்டா கொடுத்தது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எப்போதும் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற ஒரு பேச்சு ஏறக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லாமல் சொல்லி இருக்கிறது என கூறியிருக்கிறார்.

முன்னதாக தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் கோவில்களில் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை உண்டாக்கும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் கோவில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோவில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலித்தால் துறை ரீதியான குழுவின் மூலமாக ஆய்வு நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.