வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசுபவர்கள்! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு!

0
78

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்குபெறும் கால்பந்து போட்டி ஆரம்பமானது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆரம்பித்து வைத்தார். லண்டன் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் பங்கேற்றதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் காவல் துறையின் தலைவர் சைலேந்திரபாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்தார்.

அதேநேரம் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு ஒரு முன் உதாரணமாக, இருப்பவர் சைலேந்திரபாபு ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்து அமைதிப்பூங்காவாக தமிழ்நாட்டை நிறுத்திக் கொண்டு இருப்பவர் சைலேந்திரபாபு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தில் உறுதுணையாக மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டு உலக அளவில் பாராட்டப்பட்ட காவல்துறை தமிழ்நாட்டுடைய காவல்துறை எனவும், லஞ்ச லாபத்திற்கு அப்பாற்பட்டு தீவிரவாத மதத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுபவர் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவரை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு வழங்கி இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அரசியல் களத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உலா வருபவர்கள் வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததை பேசிக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு தொடர்பாக தமிழக பாஜகவின் தலைவர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு சேகர்பாபு இவ்வாறான பதிலடி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களிடமும், பலவகையான பாராட்டுகளை பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம் என்று அதற்கான தனிப்பட்ட என்னையும் சைலேந்திரபாபு வழங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.