Connect with us

Uncategorized

எங்களுடைய நிலை எப்பொழுதும் மாறாது! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

Published

on

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்களுடைய நிலைப்பாடு எப்போதும் மாறாது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்திருக்கின்றோம். யாராக இருந்தாலும் சரி அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணி அமைக்க வேண்டும். நாங்கள் அவ்வாறு சென்று விடமாட்டோம் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு, கூட்டணி அமைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார். அதோடு கூட்டணி விவகாரத்தில் பாஜக தேசியத் தலைமை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி விவகாரத்தில் தொடர்ச்சியாக கருத்துவேறுபாடுகள் நீடிக்கின்றன. அதன் காரணமாக வரும் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுபடியும் சென்னை வருகிறார். அவருடைய வருகையின் பொழுது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே நீடித்துவரும் கருத்துவேறுபாடுகள் தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement