அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

0
123

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்!

பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள பலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டதை பாஜக கூறியது.இந்நிலையில் நீதீஷ் கட்சியை சேர்ந்த மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் லெசி சிங் மீது அவருடைய கட்சி எம். எல்.ஏ ஆன பீமா பாரதிக்கு எதிராக அவதூறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதற்கு லெசி சிங் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பீமா பாரதியும் முன்பு அமைச்சராக இருந்தவா். பீமா பாரதி மற்றும் அமைச்சா் லெசி சிங் ஆகியோரின் தொகுதிகள் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது நிதீஷ் குமாா் கூட்டணி மாறியபோது லெசி சிங்குக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. பீமா பாரதியும் அமைச்சா் பதவியை எதிா்பாா்த்திருந்த நிலையில் ஆனால் அவருக்குப் பதவி கிடைக்கவில்லை. அதனை தொடா்ந்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பீமா பாரதி அமைச்சா் லெசி சிங்குக்கு எதிராகப் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

குற்றப் பின்னணி உள்ளவா்கள் அமைச்சா்களாகியுள்ளனா் என்று பாஜக விமா்சித்து வந்தது. இந்நிலையில் நிதீஷ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ ஒருவரே சக கட்சி அமைச்சா் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியது பிரச்னையை அதிகமாக்கியுள்ளது.பீமா பாரதியிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு அமைச்சா் லெசி சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

author avatar
Parthipan K