தேர்தல் விதிமீறல்! முக்கிய அமைச்சர் மீது வழக்கு பதிவு!

0
71

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேர்தல் பரப்புரை வேட்புமனுத்தாக்கல் வேட்பாளர் நேர்காணல் என நேற்றிலிருந்து அமைதியாக காணப்படுகிறது.தேர்தல் பரப்புரைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்களுமே தங்களுக்கு எதிரான கட்சியை சார்ந்தவர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் வைத்து வந்தார்கள். அதன்படி பல அரசியல்வாதிகள் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறது.

அந்த விதத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது வழக்குப்பதியப்பட்டிருக்கிறது.அதாவது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.இது தொடர்பான காணொளி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு குழு சார்பாக திருச்சி காந்தி நகர் மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பெயரில் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி தேர்தல் விதிமுறைகளை மீறியது மற்றும் சிறுவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.