விவசாயியாக நடிக்கக் கூட தெரியாதவர் ஸ்டாலின்…! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு…!

0
70

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, மதுரைக்கு வரவிருக்கும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிப்பது சம்பந்தமாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜு, அதிமுக மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று சாதிக்க உள்ளது. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து மக்களை சந்திக்க இருக்கின்றோம்.

மக்கள் அரசின் மீதான ஒரு குற்றம் குறை கூட கண்டுபிடிக்க முடியாது. அதுதான் ஆண்டவன் எதிர்க்கட்சிகளுக்கு போட்ட ஒரு வேகத்தடை ஒரு நன்மையும் செய்யாத கட்சி மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏதேதோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார்கள்.

ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறுவதற்கு ஏதாவது காரணம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் எதுவும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தில் இருக்கிறார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில், சாதுர்யமாக செயல்பட்டு கட்சி மற்றும் நிலையான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட போதும் சிரித்துக்கொண்டே கடந்து சென்றோம். சட்டையை கிழித்துக்கொண்ட போது ஸ்டாலினுக்கு போன மரியாதை இன்னும் வரவில்லை. எல்லா விஷயத்திலும் முதல்வர் கோல் போட்டு வருகின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் விவசாயி வேடம் போடுகின்றார். சிவாஜி இதையெல்லாம் பார்த்தால் என்ன செய்வார் ஸ்டாலினுக்கு ஒரு விவசாயியாக கூட நடிக்க தெரியாது போல.

உண்மையான விவசாயிக்கும் நடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் இருக்கின்றது. வடிவேலு சொல்வதைப் போன்று வரவில்லை என்றால் அதை விட்டுவிட வேண்டியது தானே? ஜெயலலிதா மரணத்திற்கு திமுக மட்டும்தான் காரணம்.

மக்கள் மனதில் வைத்து ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுக நினைக்கிறது ஜெயலலிதா மீது பொய்யான வழக்கை போட்டு அவரை வேதனைப் படுத்தியவர்கள் இவர்கள்.

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் கூட இடம் அளிக்கக்கூடாது என்று வழக்குப் போட்டு அரசியல் செய்தவர் ஆனாலும் தற்போது ஜெயலலிதா கிளப்பிற்கு நீலிக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார். அவர்களை அதிமுகவினர் நம்பக்கூடாது திமுக என்ற ஒரு தீயசக்தி ஒழித்துக் கட்ட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.