News4 Tamil
News4 Tamil : Neutral News Website in Tamil,India.News4 Tamil Offering Online Tamil News Live,Flash News live in Tamil,Breaking News in Tamil,Headline News in Tamil,Business News in Tamil,Science & Technology News in Tamil,Sports News in Tamil,Latest News in Tamil,Movie News in Tamil,Agriculture News in Tamil, Kollywood Cinema News in Tamil,Tamil Newspaper Updates,Political News in Tamil, Astrology News in Tamil,Daily News Updates in Tamil,Google News in Tamil,Tamil News Today

போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகனா? காவல் ஆணையரிடம் புகார்!

0

போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகனா? காவல் ஆணையரிடம் புகார்!

அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தன்னுடைய மகன் பற்றி சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை திருவான்மியூரில் இருந்து சொகுசு கார் ஒன்று கிழக்கு கடற்கரை சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. நீலாங்கரை அருகே வந்த போது, கார் திடீரென தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. அதிவேகத்தின் காரணமாக மேலும் கார் நிற்காமல் சாலையோரம் இருந்த ஜூஸ் மற்றும் இளநீர் கடைகளுக்குள் புகுந்து சுற்று சுவரில் மோதி நின்றது.

இந்த காரில் இருந்த நவீன் என்ற வாலிபர் தள்ளாடியபடி வெளியே வந்தார். உடனே இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாலிபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால், அந்த வாலிபர் காவலர்களை மிகவும் ஆபாசமாக திட்டியும், காவலர்கள் என்றும் பாராமல் சீருடையை பிடித்து இழுத்தும் கன்னத்தில் அறைந்தும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் காவலரை ஆபாசமாக திட்டிய நவீன் என்பவர் அதிமுகவை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வைரலானது.

இந்நிலையில், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி அவர்களிடம் தகராறு செய்தவர் தன்னுடைய மகன் இல்லை என்றும், தன் மகன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் அதில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!
WhatsApp chat