இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

0
85

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவற்றின் மூலமாக நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கற்றுக்கொள்ள இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் 32 முறை உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் என்ற புதிய வகை நோய் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. தற்சமயம் ஸ்பெயின் நாட்டிலும் ஒருவருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நோய்த்தொற்று காரணமாக, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். பிரிட்டனில் 18 முதல் 35 வயது உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு நோய்த்தொற்று தடுப்பூசிகள் உள்ளிட்ட தேவையான மருத்துவ உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மறுபடியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்க வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாக, மாணவர்களும், பெற்றோர்களும், குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து விளக்கம் தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த புதிய வகை வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியாகும் தகவலில் உண்மை கிடையாது. நோய் தொற்று பரவிடும் சூழல் ஏற்பட்டால் அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகும். அதோடு புதிய வகை நோய் தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.