இன்னும் மூன்று மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் முக்கியத் திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
62

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சுமார் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.மறுபுறம் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 76 இடங்களில் வெற்றியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றியது.

இந்த தேர்தலில், வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்கள். அதில் திமுக சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. தற்சமயம் திமுக வழங்கிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் சுமார் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அந்த கட்சியை சொல்லிக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில், திமுக கூறிய முக்கிய வாக்குறுதிகள் எதையும் அந்தக் கட்சி நிறைவேற்றவில்லை என்று தமிழகத்தில் பலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதோடு பொதுமக்கள் பலர் போராட்டத்தில் இறங்கியும் வருகிறார்கள்.

அதாவது கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியான அதிமுகவும், பொதுமக்களும், குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

ஆனால் திமுக தரப்பிலோ எங்களுடைய ஆட்சி இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும் அதற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரையில் பெண்களுக்கு உரிமை தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிமுக அரசு இதுவரையில் செயல்படுத்தவில்லை என்பதே தமிழகத்தில் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர் ,ரெட்டிபாளையம், ஆத்தூர், வேம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுகவைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் தாமோதரன் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படவில்லை என்று அனைவரும் கேட்கிறார்கள். கடந்த ஆட்சி காலத்தில் தமிழக அரசின் கஜானாவை காலி செய்துவிட்டார்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள், அதனை சரிசெய்யும் முயற்சியில் முதலமைச்சர் தற்சமயம் ஈடுபட்டு இருக்கிறார் என கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக தான் பெண்களுக்கான உரிமை தொகையை விரைவில் வழங்க முடியவில்லை ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்கு என்றால் உடனடியாக வழங்கி விடலாம். ஆனால் வருடம் முழுவதும் வழங்க வேண்டிய திட்டம் என்ற காரணத்தால், இதனை செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இன்னும் மூன்று மாதத்தில் உரிமையை தொகை வழங்கப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் .

அத்துடன் அவர் திமுகவின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அப்போதுதான் பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்த்து வைக்க இயலும், ஏனென்றால் நம்முடைய ஆட்சி என்பதால் எது தேவை என்றாலும் முதல்வர் இடமும், மாவட்ட ஆட்சியர் இடமும், தெரிவித்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க இயலும் என தெரிவித்து இருக்கிறார்.