பால் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

0
89
milk-price-action-increase-people-in-shock
milk-price-action-increase-people-in-shock

பால் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் ஆவின்,ஆரோக்கியா போன்ற நிறுவனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் தினந்தோறும் சுமார் 30லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழக நுகர்வோர் பால் துறையில் வெறும் 16 சதவீதத்தையே பூர்த்தி செய்கின்றனர்.மீதமுள்ள 84சதவீதத்தை தனியார் பால் விற்பனையாளர்களே பூர்த்தி செய்து வருகின்றனர்.

மேலும் பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகின்றது அதனால் தனியார் பால் விலையும் உயர்த்தப்படுகின்றனர்.அண்மையில் கால்நடை தீவனப் பொருட்களின் விலை சற்று உயர்ந்தது.அதனால் ஹெரிடேஜ் ,ஜெர்சி,ஆரோக்கியா ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டில் மூன்று முறை பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று நான்காவது முறையாக மூன்று தனியார் நிறுவனங்களும் பால் விலை உயர்வு என அறிவிப்பு வெளியானது.அந்த அறிவிப்பை தொடர்ந்து பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு பிறகு பால் விலையை தனியார் நிறுவனம் அதிகரித்துள்ளது.

லிட்டருக்கு ரூ இரண்டு ,முதல் ரூ ஆறு வரை விலை உயர்ந்துள்ளது.ஜெர்சி ,ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை ரூ ஆறு முதல் ரூ நான்கு என்ற விகிதத்தில் உயர்த்தி இருகின்றது.மேலும் ஆரோக்கிய நிறுவனம் லிட்டருக்கு ரூ இரண்டு உயர்த்தப்பட்டதாக அறிவித்தது.அதனால் ஜெர்சி பால் லிட்டர் ரூ59ல் இருந்து ரூ 62ஆக உயர்ந்துள்ளது.ஜெர்சி ,ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை ரூ 70மற்றும் ரூ 72ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ள நிலையிலும் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை .விலை உயர்வுக்கு பதிலாக அதிகாரிகள் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.தனியார் நிறுவனங்களின் பால் விலைக்கும் ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும் தற்போது லிட்டருக்கு 22ரூபாய் வித்தியாசம் உள்ளது.

author avatar
Parthipan K