பாலில் கலப்படம் : தமிழகம் முதலிடம்

0
125

தமிழகத்தில் விற்கப்படும் பாலில் தான் இந்தியாவிலே அதிக நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுகவின் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி குமார் சாவுபே, “2018 ஆம் ஆண்டு நடத்த பெற்ற ஆய்வில் 6 ஆயிரத்து 432 மாதிரிகள் சோதனைக்கு உள்ளாக்க பட்டன. அவற்றில் 368 மாதிரிகளில் அடலாடாக்ஸின் (aflotoxin) எம் -1 அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வகையான நச்சுத்தன்மை உள்ள பால்கள் தமிழகத்தில் தான் அதிகம் விற்கப்படுகின்றன” என்றார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலில் 93 சதவீதம் மனிதர்கள் அருந்த சரியானது என்றும் அவர் கூறினார்.

அப்லோடாக்ஸின்(aflotoxin) என்னும் வேதிப்பொருள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.