மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு

0
54

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கர்நாடகா கேரளா மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்புக்கு ஏற்ப நீரின் அளவும் அதிகமாகவே திறந்து விடப்பட்டுகிறது.

தற்பொழுது வரை கர்நாடக அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், தற்பொழுது 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகமாகவே காணப்படுவதால், காவேரி பாசன பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழ்நாடு -கர்நாடக எல்லையான புலிக்குட்டி பகுதியில் தற்போது வரை 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 70.05 அடியாக உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. டெல்டா பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது.தற்பொழுது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 32.74 டி.எம்.சியாக உள்ளது.

author avatar
Parthipan K