பேருந்து வசதிக்கு இந்த எண்களை அணுகவும் – அசத்தும் மாநகர போக்குவரத்துக் கழகம்

0
62

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த் 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களால் மட்டுமே அலுவலகத்திற்கு வரும் நிலை தொடர்கிறது. வாகன வசதி இல்லாதவர்கள், தொலை தூரத்தில் உள்ளவர்களாலும் இன்னும் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது . அதன்படி 25 பேருந்துகளும், சென்னை மாவட்ட ஆணையர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்காக 5 பேருந்துகள் என ஆக மொத்தம் 230 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

அதே போல், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, 49 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் தனியார் தொழிற்சாலைகள் பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால், மாநகர போக்குவரத்துக் கழகத்தின், தலைமையகப் பொது மேலாளரின் அலைப்பேசி எண்ணான 9445030504, துணை மேலாளர் அலைபேசி எண்ணான 94450 30523 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

[email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K