சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

0
264
#image_title

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண வருவோர்க்கு மெட்ரோ இரயில் பயணச்சீட்டு இலவசம்!!

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மேற்கொள்ளும் மெட்ரோ பயணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மெட்ரோ நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் அந்த நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாடுகளை செய்து தர மெட்ரோ நிர்வாகம் தயாராக உள்ளது.

பெட்ரோல்,காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோ பயன்பாட்டை பொதுமக்கள் மேற்கொள்ளலாம் என இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் எல்.இ.டி திரையில் அனைத்து ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நந்தனம்,வடபழனி,விம்கோ நகர்,திருமங்கலம் மற்றும் சென்ட்ரல் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்களில் உள்ள ராட்சத எல்.இ.டி திரைகளில் நேரடியாக திரையிடப்பட உள்ளது.குறிப்பாக,ஐபிஎல் போட்டிகளை காண ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் செய்தியாளர் சந்திப்பு:

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையில் ஆறு போட்டிகள் நடக்க உள்ளது. அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் சென்னையின் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் எல் இ டி திரை மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐபிஎல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் வாங்கியுள்ள டிக்கெட் மூலமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என கூறியதற்கு காரணம், ரசிகர்கள் மெட்ரோ டிக்கெட் வாங்குவதற்கு காலதாமதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் அது மட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எங்களுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள் என கூறினார். சென்னையில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளில் அந்த நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ சேவைகளின் பயன்பாடுகளை செய்து தர தயாராக உள்ளோம் என தெரிவித்தார்

இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் செய்தியாளர் சந்திப்பு:

நான் சாமி இரண்டாம் பாகம் படத்தில் பணியாற்றிய போது மெட்ரோ ரயில் குறித்து தனி பாடலையே உருவாக்கினேன் எனவும், கிரிக்கெட் என்றால் அனைவருக்கும் பிடிப்பது மட்டுமல்லாமல் இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு ஆகவும் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டை தனியாக பார்ப்பதை விட நண்பர்களுடனும் பொதுக்கூட்டத்தில் பார்ப்பதுதான் கிக் என்றார்.

இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் நிலையங்களில் கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிப்பரப்பு சென்னையில் தான் முதல் முறை என கேள்விப்பட்டேன். மெட்ரோவில் பயணம் செய்ய நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன். மெட்ரோ பராமரிப்புகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் அழகாகவும் இருப்பதாக கூறினார்.

விளையாட்டுத் துறையினரும் மெட்ரோ ரயில் சேவையும் இணைந்து புதிய முயற்சியாக ஐபிஎல் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெட்ரோல், காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக மெட்ரோ பயன்பாட்டை பொதுமக்கள் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியே நாலு இசையமைத்த பாடலில்தான் தொடங்கியது என பெருமிதம் கொண்டார்.

பின்னர் மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து வடபழனி மெட்ரோ வரை பொதுமக்களுடன் பொதுமக்களாக பயணித்தார்.

author avatar
Savitha