ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

0
143

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த சாதனை நேற்றைய ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி அதனை முறியடித்தார்.

கத்தாரில் நடைபெற்று வரும் உலக்கோப்பை போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெஸ்ஸி அடித்த கோலின் மூலம் அவர் மரோடானாவின் சாதனையை முறியடித்தார்.

இதுவரை மெஸ்ஸி 22 ஆட்டத்தில் 9 கோல்களை அடித்துள்ளார். உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா உள்ளார்.