ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

0
89

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தடை!

கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகள் படையெடுத்தன.

அதன்பின் அங்கு நடைபெற்று வந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினர். அதனை தொடர்ந்து அங்கு மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர்.

குறிப்பாக பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடை விதித்தனர். தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தனர். தலிபான்களின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவர்களிடம் அப்போது நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா ரத்து செய்தது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு கட்டுபாட்டை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். அதில், “ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காங்களுக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி வாரத்தில் நான்கு நாட்கள் அண்களும், மூன்று நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காங்களில் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.”

author avatar
Parthipan K