வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்!

0
90
Member of parliament registers police complaint against kt raghavan
Member of parliament registers police complaint against kt raghavan

வீடியோ விவகாரத்தில் கே.டி.ராகவன் கைதாவாரா? நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன்  மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தின் கீழ் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக இருக்க கூடிய கே.டி.ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக அவரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகக் காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அவர்களிடம் மனு அளித்துள்ளோம்.

இதுபோன்று பாஜக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.இவைகளை தட்டிக்கேட்காமல் பாஜக தலைவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினருக்கு எதிராக பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் இழைக்கப்பட்டுள்ளதை பல்வேறு புகார்கள் வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்த அரசில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல் துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம்.கே.டி.ராகவன் உட்பட பாஜகவினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல் துறை முறையாக விசாரணை நடத்தி நியாயம் பெற்றுத்தர வேண்டும்.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜகவினரால் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர்.எந்த ஒரு வீடியோ வந்தாலும் அதன் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அவர்களிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கூறினார்.

author avatar
Parthipan K