பொதுமக்களின் ஆர்வம்! மீண்டும் தடுப்பூசி முகாமை அறிவித்த தமிழக அரசு!

0
77

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஊராட்சி வாரியாக மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது இதில் சுமார் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதோடு பல பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி முகாமை மருத்துவர்கள் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள். இதற்கிடையில் அன்றையதினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர் இறையன்பு தற்சமயம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்து வாரம்தோறும் இதேபோன்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் விதமாக மிக விரைவாக தகுதியுள்ள எல்லோருக்கும் நோய் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.அதன் அடிப்படையில் சென்னையில் முக்கிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது என்பது வயதுக்கும் அதிகமான முதியோர்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதோடு ஒரு வார்டுக்கு இரண்டு தடுப்பூசி முகாம் என்ற விதத்தில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்ற 12ஆம் தேதி சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து வாரம் தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதனடிப்படையில் நாளையத்தினம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் ஒட்டுமொத்தமாக 1600 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கின்ற தடுப்பூசி முகாம் நடைபெறும் பகுதிகளில் தடுப்பூசி முகாம் தொடர்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். பொது மக்கள் எல்லோரும் தவறாமல் நோய் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.

சென்ற வாரத்தில் அமைக்கப்பட்டதை போல தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளையதினம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் தகுதி இருக்கின்ற எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.