நேற்று நடைபெற்ற 17வது மெகா தடுப்பூசி முகாம்! 15.16 லட்சம் பேர் பயன்!

0
64

தமிழ்நாடு முழுவதும் நேற்று 17வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது, இதில் 15.16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் 17 ஆவது தடுப்பூசி முகாம் நடந்தது இதுதொடர்பாக சுகாதாரத் துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட எல்லா பயனாளிகளுக்கும் நோய்த்தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாவது தவணையும் வழங்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

இதுவரையில் நடந்த 16 தடுப்பூசி முகாமில் 3 கோடி பேர் பயன் பெற்று இருக்கிறார்கள், அந்த விதத்தில் நேற்று நடந்த 17ஆவது தடுப்பூசி முகாமில் சிறப்பு முகாம்களில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 804 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார்கள்.

இதில் முதல் தவணையாக 4 லட்சத்து 20 ஆயிரத்து 98 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 10 லட்சத்து 96 ஆயிரத்து 706 பயனாளிகளுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரையில் 86.95%, முதல் தவணையாக 60.71% இரண்டாவது தவணையாக நோய்க்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.