சாகா மூலிகை சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!! அறிந்திராத பல நன்மைகள்!!

0
142
#image_title

சாகா மூலிகை சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!! அறிந்திராத பல நன்மைகள்!!

இன்சுலின் சுரப்பை அதிகரித்து, அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் உற்பத்தியாகும் காரணிகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க சீந்தில் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்புகளுக்கு ஊட்டத்தைக் கொடுப்பதோடு, எலும்புகளின் திண்மையை அதிகரித்து முதிர்ந்த வயதிலும் வீறுநடை போட சீந்தில் துணை நிற்கிறது. இந்த மூலிகை சர்க்கரை நோய்க்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

முதிர்ந்த சீந்தில் கொடியைக் காயவைத்துப் பொடித்து, கற்கண்டுத் தூள் சேர்த்து, பாலில் கலந்து பருகுவது வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீத பேதியைக் குணப்படுத்தக்கூடியது. ஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.

சீந்தில் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, பாதி அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை மற்றும் காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.
சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் நெல்லிக்காய், நாவல்கொட்டை பொடிகளை மோருடன் கலந்து சாப்பிடுவது, சீந்தில் கொடி சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது, இரவில் திரிபலா சூரணம் சாப்பிடுவதன் மூலம் நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளை பலமடைய செய்யும். பிற மருந்தின் சேர்க்கையுடன் நீரிழிவு, காமாலை, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, மூர்ச்சை ஆகிய நோய்களை தீர்க்கும்.

 

author avatar
Selvarani