உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

0
74

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த இயலாமல் மருத் மருத்துவ படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். இதனை அடுத்து தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பானது வெளியாவதற்கு முன்னர்,நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பை இழந்தவர்கள் மறுபடியும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். பரமக்குடியை சேர்ந்த கார்த்திகா ஜோதி, என்ற மாணவி மறுபடியும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போட்டிருந்தார் .மாணவ, மாணவிகள் கவுசல்யா ,மற்றும் சௌந்தர்யா, உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீது நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, தகுதியான மாணவர்களுடைய மருத்துவ கனவு சிதைந்து போகக் கூடாது என்ற காரணத்தால், தமிழக அரசு ஒரு சிறப்பான முடிவை எடுத்து இருக்கின்றது எனவும், ஆனாலும் மாணவி தன்னுடைய மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பை இழந்த அடுத்த தினமே இந்த உத்தரவு வந்திருக்கிறது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

அதோடு, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அருண் ,சௌந்தர்யா ,மற்றும் கௌசல்யா, ஆகிய மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பி.எஸ் இடமும் கார்த்திகா ஜோதி என்ற மாணவிக்கு ஒரு பி.டி.எஸ் இடமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றார் நீதிபதி.