திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி

0
89

திரௌபதி படத்திற்கு எதிராக திட்டமிட்ட சூழ்ச்சி! சாதுர்யமாக கையாண்ட இயக்குனர் மோகன் ஜி

கடந்த சில நாட்களாக தமிழக திரைத்துறையிலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆதரவு பெற்று ஊடகங்களில் கடும் விவாத பொருளாக மாறி வருகிறது திரௌபதி திரைப்படம் குறித்த கதை.

தமிழக திரைத்துறையில் இது வரை எந்த இயக்குனரும் முயற்சிக்காக ஒரு கதையை திரைப்படமாக எடுத்துள்ளார் பழைய வண்ணார்பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி. அதாவது சாதி மறுப்பு என்ற பெயரில் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதி பெண்களை மட்டுமே தொடர்ந்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொண்டு பெற்றோர்களிடம் பணம் வாங்கி வர சொல்வது, போலிப் பதிவு திருமணங்கள் மூலமாக பெண்ணை பெற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களை செய்து வரும் சிலரை பற்றிய படம் என்று தான் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரும் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அதே நேரத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்பு பேசும் படங்கள் மத்தியில் தைரியமாக சாதி உள்ளது என்று இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது பெரும்பாலான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நாடக காதல் செய்து பெண்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி பணம் பறித்து வந்த கும்பலுக்கு சவுக்கடி கொடுப்பது போல் இந்த படத்தின் டிரைலரும் அமைந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கூட எதிர்பார்க்காத அளவிற்கு இந்த படத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது.

எந்தவொரு புரமோஷனும் இல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இந்த படத்தின் டிரைலரை கண்டு இடது சாரி அமைப்புகளும், போலி சாதி ஒழிப்பு அமைப்பை சேர்ந்தவர்களும் அச்சம் கொண்டனர். எங்கே இந்த படம் வெளியானால் இதுவரை நாம் செய்து வந்தவை எல்லாம் வெளி உலகிற்கு தெரிந்துவிடும் என்று எண்ணிய அவர்கள் இதை வெளியிடாமல் தடுக்க முயன்று வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படம் ஆணவ கொலையை ஆதரிப்பதாக கூறி சில இடங்களில் அதை வெளியிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களிடம் விசிக மற்றும் சில இடது சாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த எதிர்ப்பின் காரணமாக படத்தின் இயக்குனர் ஏன் இந்த படத்தை எடுத்தோம் என்றும், இனிமேல் இது போன்ற படங்களை எடுக்க போவதில்லை என்றும் புலம்பியதாக தனியார் செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் திரௌபதி திரைபடத்தின் இயக்குனரான மோகன் ஜி இது முற்றிலும் தவறான கருத்து என்று மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு ஊடகங்களில் மறைமுகமாக சாதி மறுப்பு மற்றும் இடது சாரி அமைப்பை சேர்ந்தவர்கள் மறைமுகமாக பணியில் இருந்து கொண்டு தங்கள் அமைப்பின் கொள்கைகளை பரப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் திரௌபதி படத்திற்கு எதிராக இவ்வாறு சம்பந்தமில்லாத போலிச் செய்திகளை வெளியிட்டதன் மூலம் அவர்களின் உண்மை முகம் வெளியாக ஆரம்பித்துள்ளது.

author avatar
Ammasi Manickam