கனமழையை சமாளிக்க ஏரி குளங்களில் நீர் இருப்பை குறைக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி அதிரடி!

0
77

சென்னையில் கனமழையை சமாளிக்கும் விதத்தில் ஏரி, குளங்களில் இருக்கின்ற நீர் இருப்பை அப்போது இரண்டடி வரையில் குறைத்து வைத்துக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு, இணைப்பு இல்லாத 53 மழை நீர் வடிகால்களுக்கு இணைப்பு வழங்கும் பணியும் முடிவடைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் அவ்வப்போது மழை பெய்ததால் வட சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கினர் உட்புற சாலைகளில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி சென்னை மாநகராட்சி மேயரிங் 74 ஆவது வார்டு பகுதிகளில் மழை நீர் தேக்கத்தால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.

அதே போல சென்னை திரு வி க நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு பட்டாளம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று முதல் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டது. அதற்குள்ளாக வண்டல் வடிகட்டி தொட்டிகளை சுத்தப்படுத்துதல், நீர்நிலைகளை தூர்வார்தல், சாலையோரங்களின் இருக்கின்ற குப்பையை அகற்றுதல், சாலைகளில் ஏற்பட்ட சிறு பள்ளங்களை சரி செய்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் ஆபத்தான நிலையிலும் இருந்த 1018 அகற்றினர் அதோடு 344 நீர் நிலைகளில் இருந்து 1.19 லட்சம் கிலோ குப்பை மற்றும் கழிவுகளை நீக்கினர்.

புதிதாக 1969 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டதுடன் 2089 வடிகட்டி தட்டிகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சரி செய்து இருக்கிறார்கள் இந்த நிலையில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நிரம்பியுள்ள நீர்நிலைகளில் இருக்கின்ற நீரை 2 முதல் 3 அடி வரையில் குறைக்கும் படி மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது சென்னையில் மழைக்குப் பிறகு நீர் நிலைகளில் தூர்வாரப்பட்டுள்ளது அதோடு, கழிவுகள் கடலுக்குச் செல்லாமல் இருக்க நீர் நிலைகளில் வலைகள் அமைத்து அகற்றப்பட்டு வருகின்றன.

இதுபோன்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதிக கனமழை பெய்யும் போது நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து மழைநீர் வடிகால்களில் இருந்து வரும் நீரை கடல் உள்வாங்குவதில் தாமதம் உண்டாகிறது இதனால் சாலைகளில் நீர் தேக்கம் காணப்படுகிறது இவற்றை தவிர்க்கும் இடத்தில் குடிநீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய ஏரிகளை தவிர்த்து மற்ற ஏரிகள் குளங்களில் இருக்கின்ற நீர் இருப்பின் முழு கொள்ளளவில் 2 முதல் 3 அடி வரையில் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

அப்போதுதான் ஒரே சமயத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் சாலைகள் மற்றும் தெருக்களில் நீர் தேக்கம் இல்லாமல் வடிகால் மூலமாக நீர் நிலைகளுக்கு மழை நீர் செல்லும் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அவ்வப்போது நீர் இருப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையின் 59 இடங்களில் மழை நீர் வடிகால் இணைப்பு இல்லாமல் இருந்தது. கடந்த 50 நாட்களில் 53 இடங்களில் 578 கிலோமீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் கால்வாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.