ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !

0
77

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் 64 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரது பேச்சில் ‘பா.ஜ.க  அமைத்துள்ள மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியைப் போலவே செயல்படுகிறது. இரு கட்சிகளும் மக்கள் நலனையும் தேசிய நலனையும் ஒதுக்கி வைத்துள்ளன. அவை தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.

வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறைகள் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அதிகமாகிவிட்டன. அரசின் கொள்கைகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாஜக தனது கட்சியில் உள்ள குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ஆனால் நான் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

குடியுரிமைத் திருத்த சட்டம் நாட்டின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்துகிறது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் எதிர்க்கவில்லை என காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. பகுஜன் சமாஜ்தான் முதன்முதலில் குடியுரிமை திருத்த  சட்டத்தை எதிர்த்தது. நாங்கள் அமைதியான முறையில் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கட்சி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் பார்க்கிறது’ எனக் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K