தடையை நீக்கிய தேர்தல் ஆணையம்! மகிழ்ச்சியில் அரசியல் கட்சிகள்!

0
87

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த இருபத்தி 28ம் தேதி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி கடந்த 5ம் தேதி வரை நடைபெற்றது. 6ம் தேதி அன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளென்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருந்ததான ஆளும் தரப்பான திமுக இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமாக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வாகன பேரணி ஊர்வலம் உள்ளிட்டவை நடத்தப்படும். நோய் தொற்றுப்பரவல் காரணமாக, நேற்று வரை இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

அதேசமயம் நோய் தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக பொது கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையில் பிரச்சாரத்திற்கு அனுமதியில்லையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில், பிரச்சாரத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் பிரச்சாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது மேலும் வாகன பேரணி ஊர்வலம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாகன பேரணி ஊர்வலம் செல்ல விருப்பமுள்ளோர் அரசியல் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.