பெட்ரோல் டீசலின் இன்றைய விலை நிலவரம் இதுதான்!

0
77

இந்தியாவைப் பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலையை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற பிரபலமான நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், நோய்தொற்று பொது முடக்கம் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் நடையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் முதல் இதன் விலை உயர்ந்து வருகிறது.

இதற்கு நோய் தொற்றை காரணமாக தெரிவித்தாலும் கூட அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஏனென்றால் சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் மத்திய அரசு இந்த பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருந்தது என்று பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி இருக்கின்றன.

ஏனென்றால் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இருந்தால் அதன் பாதிப்பு நிச்சயமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் எதிரொலிப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்பதை மனதில் வைத்து மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகப்படுத்தாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் கடந்த 2ஆம் தேதி இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் முடிவுகள் வெளிவந்தவுடன் அடுத்த சில தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதில் இருந்தே மத்திய அரசின் நிலை இதில் எவ்வாறு இருக்கிறது என்பதை பொது மக்களால் புரிந்துகொள்ள இயன்றது.இந்த சூழ்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் ஒன்பது காசுக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு எண்பத்தி ஏழு ரூபாய் 81 காசுக்கும் விற்பனை ஆகி வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது.