முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
213
Masters NEET Postponement? The order issued by the Supreme Court!
Masters NEET Postponement? The order issued by the Supreme Court!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. மேலும் பயிற்சி காலத்தை மீண்டும் நீட்டித்திருப்பதால் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் முதலிலே மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி அனுமதி சீட்டு நேற்று வழங்கப்பட்டது. தேர்வு வரும் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாகவே அறிவிக்கப்பட்டது போல் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்பட்ட வேண்டிய கலந்தாய்வு மாணவர்கள் நலனுக்காக மாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடத்தலாம் என கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதத்தின் 15ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கி நடைபெறும் கோரிக்கைக்கு பிறகு  தேர்வு ஒத்தி வைத்தால் தேர்வுக்கான மாற்றுத் தேதிகள் கிடைக்காது எனவே தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி நடந்து வருகின்றது என கூறினார்.

அது மட்டுமின்றி ஆகஸ்ட் மாதத்தில் கூட கலந்தாய்வு நடத்தப்படலாம் என்ற அவகாசம் உள்ளது. விரைவாக தேர்வு நடத்தப்பட வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் முயற்சி செய்பவரை தடுக்க உலகில் எதுவும் கிடையாது. திட்டமிட்ட தேதியில் தேர்வு நடத்தப்படவில்லை என்றால் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு அது ஏமாற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் ஆகையால் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என உத்தரவிட்டனர்.

author avatar
Parthipan K