சுதந்திரப் பறவையாய் பேரறிவாளன்! வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார் அற்புதம்மாள் தெரிவித்த புதிய தகவல்

0
74

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவரை உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து அவர் விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் அவருடைய விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தியது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்து மாநில அரசின் சார்பாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்த தீர்மானம் மீது எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் காலதாமதம் செய்தார். இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறது, மேலும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் கொளத்தூர் மணி, மாரி செல்வராஜ், உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அவருடைய தாய் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சேலத்திற்கு வருகைதந்த பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் மேட்டூர் பேருந்து நிலையம் அருகே இருக்கின்ற பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சேலம் தனியார் சொகுசு விடுதியில் பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் உள்ளிட்டோர் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பேரறிவாளன் அற்புதம்மாள் உள்ளிட்டோர் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது இனி சுதந்திர மனிதனாக என்னுடைய மகன் வலம்வருவார், சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடி வருகிறார்கள் ,அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பேரறிவாளன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம் அதற்கான தேடலும் இனி ஆரம்பமாகும் என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.