கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

0
153
Do not get married! Need jewelry only! Everyone was stunned
Do not get married! Need jewelry only! Everyone was stunned

கல்யாணம் வேண்டாம்! நகை மட்டும் வேண்டும்! அனைவருக்கும் திகைப்பு

கொரோனா கால கட்டத்தில் கூட்டம் சேர கூடாது எனவும்,ஐம்பது சதவிகித மக்கள் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் அரசு அறிவித்தது.கூட்டம் சேராமல் இருப்பது கொரோனா பரவலை தடுக்கும் என அனைத்து அரசுகளும் பின்பற்றி வருகின்றன.

இதை பயன்படுத்தி அனைத்து தர மக்களும் மிகவும் எளிமையாக மற்றும் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து பணத்தை மிச்சப்படுத்தினர் .அதே போல் இந்த கொரோனா கால கட்டத்தில் பல வருத்தங்களும், சில ருசிகரமான சம்பவங்களும் நடைபெறுகின்றன.

ஆந்திர மாநிலத்தில், அனந்தபூர் மாவட்டத்தில் தர்மாவரத்தை சேர்ந்த ஹரிப்ரசாத் இருந்துள்ளார். இவரது வீட்டில் இவருக்கும், அதே மாவட்டத்தில் முதுகுப்பா பகுதியில் குஷ்மா என்ற பெண்ணை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதன் பேரில் நேற்று கதிரி பகுதியில் ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்த தருவாயில், முதல் நாள் இரவு மணப்பெண்ணிற்கு மஞ்சள் சடங்குகள் அவர்கள் முறைப்படி செய்து முடித்தனர்.

அப்போது திடீரென மணமகள் தனக்கு கொரோனா பாசிடிவ் என கூறி திருமணம் வேண்டாம் என்றும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இதை கேட்ட உறவினர்கள் பயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே எங்கு நமக்கும் கொரோனா நோய் தொற்று வந்து விடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் விழுந்தடித்து ஓடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து மணமகள் காவல்நிலையம் சென்று தனக்கு கட்டாய திருமணம் செய்வதாகவும் கூறியுள்ளனர்.உடனே மணமகனின் தாயார் பெண்ணிற்கு தாய் மட்டுமே உள்ள காரணத்தினால் நாங்கள் அவர்களை மேலும் துயரப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் மணமகளுக்கு 15 சவரன் நகைகளும்,திருமண செலவிற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அன்பளிப்பாக கொடுத்துள்ளோம்.

இந்தப்பெண் திருமணம் செய்தால் செய்யட்டும் இல்லையேல் நாங்கள் அன்பளிப்பாக கொடுத்தவற்றை எங்களிடமே திருப்பி தர வேண்டும் என்றும் போலீசார் முன்னிலையில் கூறினார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட போலீசார் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய இயலாது என்று கூறி கொரோனா பாசிடிவ் என்றால் முதலில் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியார வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நோய் தொற்று பரப்புதல் சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

உடனே மணமகன் நகை மற்றும் பணத்திற்காக கொரோனா பாசிடிவ் என ஏமாற்றுவதாகவும், குற்றம் சுமத்தியதால், உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் போலீசார் குழப்பமடைந்தனர்.