அடுத்த மாதம் திருமணம்! தனியார் நிறுவன பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

0
171
#image_title

அடுத்த மாதம் திருமணம்! தனியார்  நிறுவன  பெண் அதிகாரி எடுத்த திடீர் விபரீத முடிவு! 

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்துள்ள சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 31). இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர் கொடுத்து வந்தனர்.  

நேற்று முன்தினம் ஜெயந்தியின் பெற்றோர் வழக்கம் போல் காலை உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காக சென்று விட்டனர். அவரது சகோதரர் கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில்  மட்டும் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இரவு கல்லூரியில் இருந்து வீடு வந்து அவரது சகோதரர் கதவைத் தட்டி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அங்கு அவரது சகோதரி ஒரு அறையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த சோலையூர் போலீசார், தூக்கில் தொங்கிய ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது, ஜெயந்தி கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “தனது சாவுக்கு யாரும் காரணமில்லை” என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலமாக நிலம் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கி தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த கடன் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ஜெயந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.